என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது – முத்தையா முரளிதரன் அறிக்கை..!!

ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் என்று முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

800 திரைப்படத்திற்கு எதிர்ப்பை தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள முத்தையா முரளிதரன், “என்னை பற்றி திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர்கள் என்னை அணுகியபோது நான் முதலில் தயங்கினேன்.

பின், நான் உருவாக காரணமான பெற்றோர், நண்பர்கள், வழிநடத்திய ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கவே அதை ஒத்துக்கொண்டேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளராக எங்கள் குடும்பம் தங்களது வேலையை தொடங்கியது.

முப்பது வருடங்களாக நடந்த போரில் முதலில் மலையக தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

பல கலவரங்களில் நாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருகிறோம்.

என் ஏழு வயதில் தந்தை வெட்டப்பட்டார். வாழ்வாதாரம் இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம்.

எனவே போரால் ஏற்படும் இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது எனக்கு தெரியும்.

இந்த சூழலில் கிரிக்கெட்டில் நான் வெற்றிபெற்றது பற்றியே 800 படம் எடுக்கப்படுகிறது.

நான் பேசிய கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான் இது.

உதாரணமாக 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நான் என்ற 2019ல் கூறியமை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று திரித்து எழுதுகிறார்கள்.

பேர் நிறைவுபெற்றதால், 2009ஆம் ஆண்டு மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டேன். இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை அதை மனதில் வைத்தே குறிப்பிட்டேன்.

என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும், மலையங்க தமிழர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

ஒரு மலையங்க தமிழனாக, மலையங்க தமிழர்களுக்கு செய்த உதவியை காட்டிலும் ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவியே அதிகம்.

செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை ஆனால் இன்று சொல்லியே ஆகவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே