திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது

சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்கெட்டில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவலின் மையமாக மாறிய நிலையில், கோயம்பேடு மார்கெட் மூடப்பட்டது.

இதனை அடுத்து, சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.

கோயம்பேடு மார்கெட் மூடப்பட்டதால், சென்னையில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில், திருமழிசை தற்காலிக காய்கறி மார்கெட்டில் இன்று முதல் விற்பனை தொடங்கியது.

காலை முதலே வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

அனைவருக்கும் உடல் வெப்பநிலை பறிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சந்தை இன்று முதல் திறந்த நிலையில் காய்கறிகள் விலை குறைவாகவே உள்ளது. இன்று சுமார் 5000 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக இடை வெளியுடன் காய்கறிகளை வாங்கி செல்லுமாறு வியாபாரிகளுக்கு, ஒலிபெருக்கியால் காவல்துறையினர் மூலம் தொடர்ந்து அறிவுத்தப்படுகிறது.

வியாபாரிகள் தவிர பொதுமக்களுக்கு உள்ளே அனுமதி இல்லை.

காய்கறிகள் விலை பட்டியல் (கிலோவுக்கு)

வெங்காயம் -14 ரூ

தக்காளி -15 ரூ

முள்ளங்கி -20 ரூ

வெண்டை-25 ரூ

கத்திரிக்காய் -25

உருளை கிழங்கு -28 ரூ

பொடலங்காய் – 25 ரூ

கோஸ் -10 ரூ

புதினா கட்டு 1க்கு -3 ரூ

மல்லி கட்டு 1 க்கு -10 ரூ

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 525 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: