மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு..!!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கட்சியின் செயற்குழு ஒருமனதாக கமல்ஹாசனை தேர்வு செய்துள்ளதாக துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், முதல்வர் வேட்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் கூட்டணி குறித்து முடிவெடுக்க கமலுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே