உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.70 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது.
அந்த நாளில் மட்டும் 3,30,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சா்வதேச அளவில் இதுவரை 3,70,93,523 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2, கோடிய 78 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.