அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, விண்வெளி துறையில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இன்று அறிவித்த நிர்மலா சீதாராமன், செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும் என தெரிவித்தார்.
மேலும், விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம் என்றார்.
இஸ்ரோ வசதிகள் மற்றும் இஸ்ரோவின் பிற தொழில்நுட்பங்களை தனியார் துறை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றார்.
நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, விண்வெளி துறையில், தனியார் பங்களிப்பு செய்யவும், அதனுடன் இணைந்து செயல்படவும் இஸ்ரோ தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது.