தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு

மொத்த விற்பனை கடைகளில் 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கடும் உயர்வை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே