இஷான் கிஷன் வந்து விட்டார், ஷிகர் தவான் பேசாமல் என்னுடன் கால்ஃப் விளையாடலாம்: கபில் தேவ் நகைச்சுவை

இப்போது கால்ஃப் சங்க உறுப்பினராகியுள்ளேன். இதில் என் பங்கு என்னவென்று தெரியாது, பிசிசிஐ-யில் என் பங்கு என்னவென்றும் எனக்குத் தெரியாது. இதையும் ஜோக்காகத்தான் கூறுகிறேன்.

புரொபஷனல் கால்ஃப் டூர் ஆஃப் இந்தியாவின் வாரிய உறுப்பினராக கபில் தேவ் சேர்க்கப்பட்டவுடன் அவர் தன் நகைச்சுவையின் உச்சத்தில் இருந்தார் போல் தெரிகிறது.

இஷான் கிஷன் அன்று அகமதாபாத்தில் 32 பந்துகளில் 56 ரன்கள் வெளுத்துக் கட்டிய பிறகு ஷிகர் தவான் இடம் கேள்விக்குறிதான் என்று கூறிய கபில்தேவ், டெஸ்ட்டிலு இனி அவர் உள்ளே வருவது கடினம். ஒருநாள் போட்டிகளிலும் கூட கஷ்டம் தான், இனி அவருக்கு என்ன இருக்கிறது, என்னுடன் கால்ஃப் விளையாடலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்சைடு ஸ்போர்ட் ஊடகத்துக்கு அவர் கூறும்போது, “அவரிடம் நான் கூறுவேன், “வா என்னுடன் வந்து கால்ஃப் ஆடு வா” நான் இதனை ஒரு ஜோக்காக நகைச்சுவையாகத்தான் கூறுகிறேன். நான் கிரிக்கெட் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இப்போது கால்ஃப் சங்க உறுப்பினராகியுள்ளேன். இதில் என் பங்கு என்னவென்று தெரியாது, பிசிசிஐ-யில் என் பங்கு என்னவென்றும் எனக்குத் தெரியாது. இதையும் ஜோக்காகத்தான் கூறுகிறேன். ஏனெனில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐ-யின் அங்கமாகவே இருப்பார்கள்.

எப்போது பிசிசிஐ எங்களை அழைத்தாலும் நாங்கள் தயாராக இருப்போம்., என்றார் கபில்தேவ்.

ஷிகர் தவானைப் பொறுத்தவரையில் கரியர் முடிந்து விட்டது என்றே கூறலாம். அன்று இங்கிலாந்துக்கு எதிராக மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துகள் அவரது கண்களுக்குத் தெரியவில்லை என்று. தெரிந்தது 12 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார்.

இதனையடுத்து இஷான் கிஷன் இறக்கப்பட்டார், அவரும் தன் வாய்ப்பை இறுகப் பற்றி கொண்டார். இனி டி20 அணியில் ஆல்ரவுண்டர்கள், பவர் ஹிட்டர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பது திண்ணம். ஆனால் ஷிகர் தவான் ஒரு தன்னலம்பாரா வீரர் என்ற அளவிலிம் இந்திய அணிக்காக பிரமாதமான பங்களிப்புகளை செய்ததோடு 2015 உலகக்கோப்பை 2019 உலகக்கோப்பையிலும் அர்ப்பணிப்புடன் ஆடியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வென்று ஒரு அடி முன்னேறினால் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இஷான் கிஷனுடன் அவரது மும்பை கேப்டன் ரோகித் இன்று களமிறங்குகிறார். என்று தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே