தமிழகத்தில் சிறார் ஆபாசப் படம் பார்ப்பது குறைந்து விட்டது : ஏடிஜிபி ரவி

சிறார் ஆபாச படங்களைப் பார்த்ததாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றவியல் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

முழுமையான கல்வி என்ற தலைப்பில் ஓவியர் சொர்ணலதா எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி ரவி, கடந்த ஒருமாத காலத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது என்பது முழு அளவில் குறைந்திருப்பதாக கூறினார்.

மேலும், காவலன் எஸ்ஓஎஸ் செயலியை இதுவரை 12 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே