ஐசரி கணேஷ், ராதாரவி, சரத்குமார் சதி செய்கின்றனர் : பூச்சி முருகன்

தேர்தல் முடிவு வெளியானால் தோற்று விடுவோம் என்பதால் ஐசரி கணேஷ், ராதாரவி, சரத்குமார் ஆகியோர் சதி செய்வதாக நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் ராதாரவியின் அண்ணன் அளித்த புகாரின் பேரிலேயே நடிகர் சங்கத்திற்கு ஏன் தனி அதிகாரியை நியமிக்க கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் வரை நடிகர்களுக்கு பென்சன் வழங்கப்பட்டுள்ளதால் நடிகர் சங்கம் செயல்பட்டு வருவதாக கூறினார்.

தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் உள்ள பிரச்சினைகளை எழுத்து மூலமாக சமாதானம் செய்து வருவதாக பூச்சி முருகன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே