காஷ்மீர் விவகாரத்திற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாளை மறுநாள் இந்தியா வர உள்ள நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கென் ஸ்வாங், காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்தார்.
பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு என்றும் கென் ஸ்வாங் குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சீனா, தற்போது இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.