காதல் இன்னும் இருக்கோ?: ஐஸ்வர்யா ராய் பற்றி ட்வீட்டிய நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை அடுத்து அவரின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
77 வயதாகும் அமிதாப் பச்சனின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப், அபிஷேக்கிற்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய், ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா குறித்த செய்தியை பார்த்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ட்வீட் செய்தார்.
விவேக் ஓபராயின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விவேக் பற்றி சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

உண்மை காதல் என்றும் மாறாது. இன்னும் ஐஸ்வர்யா ராயை மிஸ் பண்ணுகிறீர்கள் போன்று. உங்களின் நிலைமை புரிகிறது. பழைய நினைப்பு இன்னும் போகலயோ. இது சல்மான் கானுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளனர்.
விவேக் ஓபராயின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ஐஸ்வர்யா ராய் உங்களை பயன்படுத்திக் கொண்டு பின்னர் பிரிந்துவிட்டார். அவர் உங்களை யூஸ் பண்ணியும் நீங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தீர்கள். அதை எல்லாம் மறந்துவிட்டு ஐஸ்வர்யாவுக்காக பிரார்த்தனை செய்யும் உங்களுக்கு பெரிய மனசு தான்.

பெரிய மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம். 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைவுகூர்ந்து கிண்டல் செய்பவர்களை எல்லாம் என்ன சொல்வது.

விவேக்கிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் ஐஸ்வர்யா ராய்க்காக மட்டும் அல்ல அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்காகவும் தான் ட்வீட் செய்தார். அதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

விவேக் ஓபராயும், ஐஸ்வர்ய ராயும் ஒரு காலத்தில் காதலித்தனர். அதை மனதில் வைத்து தான் விவேக்கை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள்.
அமிதாப், ஐஸ்வர்யா ராய், அபிஷேக், ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவர்களுக்கு சொந்தமான ஜல்சா, ஜனக், பிரதிக்ஷா, வத்சா ஆகிய நான்கு பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அமிதாப் பச்சன் வீட்டில் அவரின் மனைவி ஜெயாவுக்கு மட்டும் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. அபிஷேக் பச்சன் கடந்த 10ம் தேதி வரை தான் நடித்துள்ள வெப்தொடருக்கான டப்பிங் பணியில் பிசியாக இருந்தார்.

அவர் தினமும் மாஸ்க் அணிந்து டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்று வந்தார். தற்போது அபிஷேக்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் அந்த ஸ்டுடியோவை தற்காலிகமாக மூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே