அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக நடிகர் பிரசன்னா குற்றம் சாட்டிய நிலையில் மீண்டும் கணக்கீடு செய்து சரிபார்க்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த பொதுமுடக்கத்தின் மத்தியில் மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று நடிகர் பிரசன்னா பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்த மாதம் மின்சார கட்டணம் தனது தந்தை, மாமனார், தன்னுடைய வீட்டிற்கு சேர்த்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
தன்னால் இந்த தொகையை கட்டி விட முடியும்; சாதாரண மக்களால் எப்படி கட்ட முடியும் என பிரசன்னா கேள்வி எழுப்பினார்.
பொதுமுடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியை பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம் பிரசன்னா வீட்டின் மின்சார கணக்கு சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.