மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்..! சாப்பிடும் ஆண்கள் மாடாக பிறப்பார்களாம்.!

மாதவிடாய் காலத்தில் சமையல் செய்யும் பெண்கள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள் என்று சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி பேசியிருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி ஆற்றும் சொற்பொழிவுகள் பல அந்தக் கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பூஜ் நகரில் உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 1,500 மாணவிகள் படிக்கின்றனர்.

மேலும் 60 மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த விடுதி மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்று புகார் எழுந்தநிலையில் 60 மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொல்லி கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்தக் கல்லூரியின் மதபோதகர் சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி பேசுகையில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள் என்றும்; மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவைச் சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாகத்தான் பிறப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை.

ஆனால், இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அவர் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே