கருணாநிதியின் 97வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

கலைஞர் என்ற வார்த்தையை சொல்லும் போது கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்த்தாயின் ஆண் வடிவமே, மூத்த தமிழ் இனத்தின் முழு உருவமே, எங்களின் உயிரின் உயிரே என்ற தலைப்பில் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அரசியல், இலக்கியம், திரையுலகம் என அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்துள்ள கலைஞர், இந்த நூற்றாண்டின் சரித்திர தலைவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

பெரியார், அண்ணா, காமராஜர் போன்றோர் கலைஞரை புகழ்ந்துள்ளதையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே