வனிதா திடீர்னு ட்விட்டரில் இருந்து வெளியேற நயன்தாரா தான் காரணமா?

வனிதா விஜயகுமார் ட்விட்டரில் இருந்து திடீர் என்று வெளியேற நயன்தாரா தான் காரணம் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தபோது யாரும் அவர்களை விமர்சிக்கவில்லை. ஆனால் திருமணம் முடிந்த பிறகு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஏற்கனவே மனைவி இருக்கும் நிலையில் வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் வனிதாவை எலிசபெத் ஹெலனின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

எலிசபெத் ஹெலன் மீடியா மூலமாக நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டார். இதையடுத்து ஹெலனுக்கு உதவி செய்வது என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முடிவு செய்து #ISupportElizabeth என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்தார்.

அதை பார்த்த வனிதா, யாரும், யாரையும் ட்விட்டரில் ஆதரிக்கட்டும். அதனால் பலனில்லை. அதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கை கிடைக்கப் போவது இல்லை.

விவாகரத்திற்கு பிறகு முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பீர்கள். இந்த உலகமே எலிசபெத்திற்கு சப்போர்ட் பண்ணட்டும். அதனால் அவருக்கு கணவர் திரும்பக் கிடைத்துவிடுவாரா? சீப் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்றார்.

வனிதாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர், இந்த மக்களுக்கு பெரிய ஆட்களான கமல் ஹாஸன், நயன்தாரா உள்ளிட்டோரின் பெயரை சொல்ல தைரியம் இல்லை. அனைத்து சேனல்களும் வனிதா விஜயகுமாரை வைத்து பணம் பார்க்கின்றன என்றார். அதற்கு வனிதாவோ, இது பற்றி உங்களின் கருத்து என்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி. பிரபுதேவாவுடன் வாழ்ந்தபோது நயன்தாராவும் பிட்ச்சா… நீங்கள் ஏன் அவரின் மனைவி ரம்லத்துக்காக குரல் கொடுக்கவில்லை. அவரும் 3 பிள்ளைகளின் தாய், நீதிமன்றம் மற்றும் மீடியாவிடம் சென்றார் என்றார்.
வனிதாவின் ட்வீட்டை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். உங்கள் சண்டையில் எங்கள் தலைவியின் பெயரை எதற்காக பயன்படுத்துகிறீர்கள். உங்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றி நாங்கள் ஏதாவது சொன்னோமா. அப்படி இருக்கும்போது நயன்தாரா பிரபுதேவாவுடன் இருந்ததை பற்றி தற்போது எதற்காக பேசுகிறீர்கள்.

யாரையாவது வம்பிழுக்கவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதா என்று விளாசினார்கள். நயன்தாரா பற்றி ட்வீட் போட்ட சில மணிநேரத்தில் வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேற நயன்தாரா தான் காரணம் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை வம்பிழுத்தால் இப்படித் தான் நடக்கும் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வனிதா தன்னை விளாசிய பிறகு கஸ்தூரி யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி பீட்டர் பால் யார், அவருக்கு நிஜமாகவே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதா என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
தான் ஒரு வீடியோ வெளியிட்டதற்கே வனிதாவை ட்விட்டரில் காணவில்லை என்று கஸ்தூரி கூறினார். மேலும் வனிதா விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரை ஒரே நேரத்தில் பேட்டி எடுத்து அந்த வீடியோவை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டார் கஸ்தூரி.

யூடியூப் சேனல் துவங்கியதில் இருந்து வனிதா பற்றிய வீடியோக்களை தான் வெளியிட்டு வருகிறார் அவர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே