4 மாதம் தனியாய் தவித்து ஒரு வழியாக குடும்பத்தாருடன் சேர்ந்த அதர்வா ஹீரோயின்.

லாவண்யா திரிபாதி நான்கு மாதங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தாரை சந்தித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் லாவண்யா திரிபாதி. கடந்த 2014ம் ஆண்டு வெளியான சசிகுமாரின் பிரம்மன் படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு லாவண்யா தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
ஹைதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வரும் லாண்யா மாயவன் படத்தை அடுத்து 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

புதுமுகம் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லாவண்யா திரிபாதி. அந்த படத்தில் அதர்வா கான்ஸ்டபிளாக நடிக்கிறாராம்.

அதர்வாவுக்கு ஏற்ற ஹீரோயினை தேட ரவீந்தர மாதவா செய்த காரியம் தான் பலரையும் வியக்க வைத்தது. அதாவது தன் பட ஹீரோயின் அழகாக இருந்தால் மட்டும் போதாது, நன்றாக நடிக்கவும் வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் ரவீந்திர மாதவா. அதற்காக 66 பேரை நிராகரித்து ஒரு வழியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்திருக்கிறார். ஹீரோயினுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். ரவீந்தர மாதவா 66 பேரை நிராகரித்து லாவண்யாவை தேர்வு செய்ததாலேயே அந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்க்கும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அதர்வா, லாவண்யா படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனால் லாவண்யா ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டார். கடந்த 4 மாதங்களாக ஹைதராபாத்தில் தனியாக இருந்த லாவண்யா ஒரு வழியாக நேற்று தன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
ஹைதராபாத்தில் இருந்து டேராடூனுக்கு லாவண்யா விமானத்தில் சென்றார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு விமானத்தில் செல்பவர்கள் பாதுகாப்பு கவசம், மாஸ்க் எல்லாம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேற்று கிரகவாசிகள் மாதிரி இருந்தாலும் பாதுகாப்புக்கு அது அவசியம். இந்நிலையில் லாவண்யா பாதுகாப்பு கவசம் அணிந்து விமானத்தில் பயணம் செய்தபோது செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கவசத்துடன் நடந்தபோது வீடியோ எடுத்து அதையும் வெளியிட்டுள்ளார்.

லாவண்யா பத்திரமாக டேராடூனுக்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகு வீடியோ வெளியிட்டு லாவண்யா கூறியிருப்பதாவது, ஒரு வழியாக டேராடூனுக்கு வந்து என் குடும்பத்தாரை பார்த்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் முடிந்துவிட்டாலும் வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் லாவண்யா பயணம் செய்யத் தயங்கினார். அதன் பிறகு ஹைதராபாத்தில் தனியாக இருப்பதை விட டேராடூனுக்கு செல்வதே சரி என்று கிளம்பிச் சென்றுவிட்டார்.
ஹைதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், பாயல் ராஜ்புட் ஆகியோரும் அண்மையில் தான் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லாவண்யா திரிபாதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் அர்ஜுன் சுரவரம். அடுத்ததாக லாவண்யா சந்தீப் கிஷனுடன் சேர்ந்து ஏ1 எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அவர் ஹாக்கி வீராங்கனையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் வேலையில்லாமல் தவிக்கும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு லாவண்யா திரிபாதி நிதியுதவி அளித்தார். சினிமா கலைஞர்களுக்கு தானாக முன்வந்து உதவிய முதல் நடிகை லாவண்யா ஆகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே