“மாஸ்டர் ஒரு மறக்க முடியாத நினைவு”…இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.

அந்தவகையில், விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“கண்டிப்பாக மாஸ்டர் ஒரு மறக்க முடியாத நினைவுதான். அதில் ஒரு நாளை மட்டும் என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது, அதை நினைத்து சந்தோஷப்படுவேன் அண்ணா. இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், விஜே ரம்யா, ஸ்ரீமன், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தணிந்து இயல்புநிலை திரும்பிய பின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Lokesh Kanagaraj

@Dir_Lokesh

Master was indeed an unforgettable memory…I cannot choose any one day …every moment spent with you will forever be cherished na…..

Thanks for making it happen..
Happy birthday @actorvijay anna…Love you❤️❤️❤️#HBDTHALAPATHYVijay

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே