பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமா? – வழக்கு விசாரணைக்கு ஏற்பு..!!

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று சில மாநிலங்கள் சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

பிச்சை எடுப்பது குற்றம் என்று மாநில அரசுகள் இயற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, கிரிமினல் குற்றம் என சட்டம் இயற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிச்சை எடுப்பது குற்றம் என்று சட்டம் இயற்றியிருக்கும் பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநில அரசுள், அதற்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்ட தண்டனையும் வகுத்துள்ளது.

இந்த நிலையில், பிச்சை எடுப்பது குற்றமா? என்று விளக்கம் அளிக்கக் கோரி அந்த மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுளள்து.

பிச்சை எடுப்பது குற்றமாகாது என கடந்த 2018-ல் தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த தீர்ப்பில், பிச்சை எடுப்பது என்பது ஏதோ அவர்கள் மிகவும் விரும்பி செய்வதல்ல என்றும்; அவர்களது குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கிடைத்த மிகக் கடைசி வாய்ப்பு அது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே