இரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

அனைத்து சமூக வலைதளங்கள், ஊடகங்களில் இருந்து இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் குத்து படத்தின் டீசரின் வசனங்கள், காட்சிகள் ஆபாசமானதாக இரட்டை அர்த்தம் கொண்டதாக உள்ளன.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் சூழலில் இதுபோன்ற டீசர்கள் வருவது நல்லதல்ல என கோர்ட் தெரிவித்துள்ளது.

இரண்டாம் குத்து படத்தின் போன்ற டீசர்கள் குற்றங்களை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

உள்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, தணிக்கைக்குழு, டிஜிபி, படத்தின் இயக்குநர் விளக்கம் ஆதரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே