கொசு கடிக்கும் வரை உள்ளாட்சித்துறை என்றும், கடித்த பின்னர் தான் சுகாதாரத்துறை பொறுப்பு எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மஹிலா கூடுதல் நீதிமன்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தெலுங்கானாவில் பத்தாயிரம் பேருக்கும், சிங்கப்பூரில் 12 ஆயிரம் பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் குறைவான மக்களுக்கு மட்டுமே காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.