சென்னையில் பிளாஸ்டிக்கை சிதைக்கும் இயந்திரம் அறிமுகம்

பயன்பாடற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் வகையில் இயந்திரம் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற நகரங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும் சென்னையில் ரயில்வே துறை உதவியுடன் செண்ட்ரலில் முதல் முறையாக நிறுவியுள்ளது.

நாம் பயன்படுத்திய தேவையற்ற தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் பிளேட் மூலம் முழுமையாக சிதைத்து விடும்.

பிறகு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் தண்ணீர் பாட்டில் செய்யவோ அல்லது வேறு ஏதேனும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக மறுசுழற்சிக்கு அந்நிறுவனம் அனுப்பிவைக்கிறது.

பிளாஸ்டிக்கை தவிர்த்து வேறு ஏதேனும் இரும்போ அல்லது மரச்சாமான்களையோ இந்த இயந்திரத்தில் செலுத்தினால் அதுவாகவே வெளியே தள்ளிவிடுகிறது.

முழுக்க முழுக்க தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கலை சிதைக்க மட்டுமே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உதவியுடன் மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம், வணிக வளாகம், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் இதுபோன்ற இயந்திரம் பொருத்தினால் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த இயந்திரத்தை சென்னையில் முதல் முறையாக செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே