காஞ்சிபுரம் பொறியாளருடன் பழகிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரானா பாதித்த காஞ்சிபுரம் பொறியாளரோடு பழகிய 7 பேர் உள்ளிட்ட 8 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓமனில் இருந்து தாயகம் திரும்பிய, காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருடன் பழகிய 7 பேர் உள்ளிட்ட 8 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர்களில் யாருக்கும் கொரானா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரானா பாதிப்பு இல்லை என உறுதியாகி இருப்பதாகவும்; அதேசமயம் தீவிர கண்காணிப்பு தொடர்வதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே