கேமரா தொழில்நுட்பத்தில் பிரபலமாக விளங்கும் விவோ நிறுவனத்தின் வி-சீரிஸ் வரிசையில் புதிதாக Vivo V17 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் இன்று டெல்லியில் அறிமுகமானது.
இந்த போனில் Punch Hole கேமராவுடன் கூடிய 6.44FHD+Amoled டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனின் எடை 176 கிராம் என்பதால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U20 மாடலை விட இந்த புதிய போன் எடை குறைவானதாக உள்ளது.
இந்த டூயல் சிம் போனில் மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் அதிக சக்திவாய்ந்ததாக கருதப்படும் Snapdragon 675 chipset பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே சிம்செட் தான் Vivo U20 மாடலிலும் இடம்பெற்றிருந்தது.
8GM RAM, 128GB Internal Storage, 48MP+ 8MP sensor+ Two 2MP sensors என 3 கேமரா செட்டப், 32 MP selfie camera போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.
மேலும் கேரமாவில் பல புதிய படமெடுக்கும் அம்சங்களும், நைட் மோட் போன்ற நுட்பங்கள் இருப்பது படமெடுக்கும் அனுபவத்தை புதிய பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
4500mAh battery, USB Type-C support, 18w fast-charging system, Fingerprint Sensor, OTG போன்றவை இந்த புதிய ஸ்மார்ட்போனின் பிற சிறப்பு அம்சங்களாக உள்ளன.
22,990 ரூபாய் விலையிலான இந்த ஸ்மார்ட்போன், கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.