ஊராட்சித் தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம்..!

கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில், அதிமுக பிரமுகர் சக்திவேல் ஏலத்தில் தலைவர் பதவியை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி இந்த ஏலத்தை நடத்தியுள்ளனர்.

தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கி ரூ.15 லட்சமும் ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக பிரமுகர் சக்திவேல் தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்துள்ளார்.

தேமுதிக பிரமுகர் முருகன் துணைத்தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்துள்ளார்.

வரும் 15-ம் தேதி இருவரும் பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே