இந்தியாவில் பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழ்நாட்டில் இந்நோயானது 400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளில் இயக்கப்பட உள்ள தானியங்கி ரோபோக்களை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த ரோபோக்களை, Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ரோபோக்களுக்கு, Zafi, zafing bo, zafing medic என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உணவு ,குடிநீர் ,மருந்து, மாத்திரைகளை எடுத்துச் செல்லும்படி ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்; இதன் மூலம் வைரஸ் தொற்று பரவலை அதிகபட்சமாகத் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.