கொரோனா தொற்றில் தமிழகம் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 100 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர்.

மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் மூலமாக ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக இருந்த நிலையில், தற்போது 411 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் கொரோனா பரவல் நிலையில் 2 ஆம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை.

எனினும், கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 90, 412 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே