வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, வீடுகளுக்கு டோக்கன் வழங்கும்போதே 1000 ரூபாய் வழங்கப்படும் என இன்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டும் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, இல்லத்திற்கே வந்து நியாயவிலைக் கடை அதிகாரிகள் ரூ.1,000 வழங்குவார்கள் என்றும்; ஏற்கெனவே டோக்கன் பெற்றவர்களுக்கு நாளை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.