எனது உடல்நிலை குறித்து வலைத்தளங்களில் வெளியானது புரளியே, அந்த தகவல்களில் உண்மையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
“நான் நலமுடன் இருக்கிறேன், எந்தநோயாளும் பாதிக்கப்படவில்லை. எனக்கு எந்த உடல்நலன் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை” என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சில நாட்களுக்கு முன்பு, வலைத்தளங்களில் எனது உடல்நிலை குறித்து சில பொய்யான தகவல்கள் வெளியாகின.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இரவு பகலாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இது பற்றி நான் கவனிக்கவில்லை.
இன்றுதான் இது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்வதால் சிலருக்கு ஆனந்தம் கிடைக்கும் என்றால், அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.
ஆனால், எனது உடல்நிலை குறித்து தவறான தகவலை அறிந்து கவலையில் ஆழ்ந்த எனது கட்சியினர் மற்றும் நலம்விரும்பிகளுக்காக இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, எனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.