வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணிகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்ய வேண்டுமென்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அந்தந்த வேட்பாளர் மற்றும் கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும்.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.

வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நான்கு நாட்களுக்கு முன்பாக, போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே