தமிழகத்தில் மழை காரணமாக தொற்று நோய் பாதிப்புகள் இல்லை – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மழை காரணமாக தொற்று நோய்கள் ஏதும் யாருக்கும் தற்போது வரை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு நகர் பகுதியில் அடப்பன் குளம் நிரம்பியுள்ளது.

இதனால் கால்வாய்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடப்பன்குளத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே