தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கி இந்தியா டுடே குழுமம் கவுரவிப்பு

தலைநகர் டெல்லியில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான இந்தியா டுடே குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன.

சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கியதற்காகவும், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காகவும் தமிழகத்துக்கு விருதுகள் கிடைத்தன.

இந்த விருதுகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடமிருந்தும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டு இந்த விருதுகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றதாகவும், இந்த ஆண்டு அவருக்கு பதிலாக தாம் அந்த விருதை பெற்றதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே