வடகிழக்கு பருவமழை தீவிரம்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

அக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

பருவமழை தொடங்கியபோதும் சென்னையில் தேவைகேற்ற போதிய மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இன்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகின்றது.

கடந்த ஒராண்டாக சென்னை மாநகரம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த நிலையில் பருவகாலம் துவங்கியபோதும் மழை இல்லாதது பொதுமக்களை கவலைஅடையச்செய்த நிலையில் இந்த மழை சென்னை வாசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

தொடர்ந்து இதே போன்று மழை இந்த மாதம் முழுவதும் தொடர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே