சீனர்களுக்கான விசா கட்டணங்களை குறைத்துள்ளது இந்தியா

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பை குறிக்கும் வகையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வந்து செல்லும் வகையிலான விசாவை 80 டாலர் கட்டணத்தில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறுகியகால பயணங்களுக்கான விசா கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

இதன்படி 30 நாட்கள் விசா காலத்துடன் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவிற்கு வரும் சீனர்களிடம் விசா கட்டணம் மிகக் குறைந்த அளவாக 10டாலர் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டில் பல முறை இந்தியாவிற்கு வந்து செல்லும் வகையிலான விசாவிற்கு 40 டாலர் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே