விளையாட்டு துறையில் மிகச்சிறந்த சக்தியாக, இந்தியா உருவாகி வருகிறது – அபிஷேக் பச்சன்

விளையாட்டு துறையில் மிகச் சிறந்த சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது என பாலிவுட் நடிகரும், ISL சென்னை FC அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான அபிஷேக் பச்சன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் மக்கள் தற்போது கால்பந்து, கபடி, கைப்பந்து, பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட லீக் போட்டி தொடர்களுக்கும் ஆதரவு அளித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் எப்போதும் நடிகராக இருப்பது மட்டுமே மகிழ்ச்சி எனவும் அபிஷேக்பச்சன் தெரிவித்தார்.

தொடர்ந்து தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் சென்னை எப்சி கால்பந்து அணி வீரர்களுடன் பங்கேற்றார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் நடிகர் ரஜினி பேசிய பஞ்ச் வசனங்களை பேசியும், நடனமாடியும் உற்சாகம் ஊட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே