அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது அசத்தல் பந்துவீச்சின் மூலம் முத்திரை பதித்து வருகிறார்.

நேர்த்தியான யார்க்கர், திடீர் பவுன்சர், ஸ்லோவர் ஒன் என விதவிதமான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் பும்ரா அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 27 விக்கெட் வீழத்தி ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான குவாலிபையர் 1-ல் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

புவனேஷ்வர் குமார் 2017-ல் 26 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 2013-ல் 24 விக்கெட்டுகளும், உனத்கட் 2017-ல் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே