கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து தொடர்பாக தங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சாட்சி என்ற பெயரில் அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்காக சாட்சி என்ற பெயரில் தங்கள் கட்சி தலைவர் கமல்ஹாசனை, காவல் நிலையத்துக்கு வரவழைத்து மூன்று மணிநேரம் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலமாக விசாரணை நடத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுபோன்ற செயலை தமிழக அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே