சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி. 

2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.

அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது. சில கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது.

இதனிடையே, நேற்று சேலத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று முதல் சேலம் மாவட்டம் பெரிய சோரகை பெருமாள் கோயில் அருகே 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். 

அதன்படி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவியில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அதிமுக இதுவரை எடப்பாடியில் 6 முறை வென்றுள்ளது. அதில் குறிப்பாக முதல்வர் பழனிசாமி 4 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே