இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் – ஆரான் பின்ச் ஜோடி142 ரன்கள் அடித்தது.

ஆரான் பின்ச் 60 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதம் அடித்து கடைசியில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 389 ரன்களை அடித்தது.

இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோர் (இந்தியாவுக்கு எதிராக)

1) 389 ரன்கள் (நவம்பர் 29, 2020)
2) 374 ரன்கள் (நவம்பர் 27, 2020)
3) 359 ரன்கள்
4) 350 ரன்கள்
5) 348 ரன்கள்

இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே