சிலிண்டர் கட்டணத்தை மின்னனு முறையில் செலுத்தும் வசதி – இண்டேன்

இண்டேன் வாடிக்கையாளர்கள், சிலிண்டர் கட்டணத்தை மின்னனு முறையில் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

  • அலைபேசி மூலம் சிலிண்டர் புக் செய்தபின் உடனடியாக வரும் குருஞ்செய்தியில் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்.
  • அந்த லிங்கை திறந்து சிலிண்டருக்கான தொகையை நெட் பேங்கிங், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், இ.வாலட் ஆகியவை மூலம் செலுத்தலாம்.
  • இந்த மின்னனு முறையில் பணம் செலுத்தியபின் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.
  • பெரும்பாலும் ரொக்கமாக செலுத்துவதைத் தவிருங்கள் என்று கூறியுள்ளது.

மேலும் மற்றொரு வழியாக டெலிவரி பணியாளரிடம் டிஜிட்டல் பேமெண்ட் மூலமும் பணத்தை செலுத்தலாம். அப்படி வைத்திருக்கவில்லை எனில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தும் POS கருவியை எடுத்து வரும்படி அறிவுறுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பணப் பரிவர்த்தணைச் சேவையால் டெலிவரி செய்பவருக்கு டிப்ஸ் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றும், டிப்ஸ் கொடுப்பதை இந்தியன் ஆயில் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு சென்னையில் 044-24339235 / 24339236 ஆகிய எண்களுக்கு காலை 9:30 முதல் மாலை 5:15 வரை தொடர்பு கொள்ளலாம்.

அவசர சேவைக்கு 1906 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அணுகலாம்.

புகார்களுக்கு 18002333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே