தீபாவளி பண்டிகை காரணமாக ஆடுகளின் தேவை அதிகரிப்பு

தர்மபுரி நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகளை வாங்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இதனால் சென்ற வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஆடு இந்த வாரம் 10,000 ரூபாய்க்கும், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி கூட இந்த வாரம் 6000 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனையானது.

இதன் காரணமாக நல்லம்பள்ளி ஆட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டதால், ஆடு வாங்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே