பங்குச்சந்தையில் சரிவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிந்து 38,963 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,588 புள்ளிகளாக குறைந்தது.

2 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பது, பிரெக்சிட் விவகாரம் போன்ற காரணங்களால் சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அன்னிய செலாவணி சந்தையில் வர்த்தக நேர தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் அதிகரித்தது.

வர்த்தக முடிவில் 18 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 96 காசுகளாக உயர்ந்தது.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை, சாதகமான கச்சா எண்ணெய் விலை போன்றவவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே