ஜனவரி முதல் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாட்டிற்கு ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில் சமூக வலைதளங்களை ஒழுங்கு முறைப் படுத்துவதற்கான விதிகளை சீர்திருத்தம் செய்வது அவசியம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற சமூக வலைத்தள பயன்பாடு தனிநபர் உரிமைகள் மட்டுமின்றி, தேசிய ஒருமைப்பாடு பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணையதள பயன்பாடு அதிகரிப்பு சமூக வளர்ச்சிக்கு ஒரு புறம் உதவினாலும், வெறுப்பு பேச்சுக்கள், போலி செய்திகளால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே