CAA : ஈரோட்டில் 6-வது நாளாக முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடியிருப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். 

நாளுக்கு நாள் இவர்களின் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்தப் பகுதியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாள் முழுவதும் முஸ்லிம்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு உள்ளனர்.

இரவில் ஆண்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே