கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் – ராதாகிருஷ்ணன்

சென்னை தண்டையார்ப்பேட்டையில் நடக்கும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது ;

கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கண்டு அஞ்ச வேண்டாம்.

கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

நோய் எதிர்ப்பு இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டால் , மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது.

இதுவுரை 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது , கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம்.

சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

மக்களுக்கு கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது.

11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது.முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே