அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு  23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. எந்தெந்த தெகுதிகள் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.

பாமகவுக்கு வட மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும்,  இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே