ரேஷன் கடைகளில் மே மாத உணவு பொருட்கள் ஏப்ரல் 27 முதல் வழங்கப்படும் : தமிழக அரசு

மே மாதத்திற்கான விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் வரும் 27ம் தேதி முதல் வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது.  

இதற்கான டோக்கன் நாளை அல்லது நாளை மறுதினமோ வீடுகளுக்கு சென்று கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே