குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டன..

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

இந்த போராட்டத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், நாட்டில் தற்போது நிலவும் சூழலுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் எனவும்; அவர்களது சித்தாந்தங்களை நாட்டில் புகுத்த நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு கேரளா எப்போதும் ஆதரவை தரும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே