தட்டுப்பாட்டை போக்க வெங்காய இறக்குமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெங்காய தட்டுப்பாட்டை போக்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆண்டு வெங்காயம் 52 லட்சத்து 6 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி ஆன நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, விலையும் கடுமையாக உயர்ந்தது.

இந்த நிலைமையை மாற்ற வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் நிலவும் வெங்காய தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி 4 ஆயிரம் டன் வெங்காயத்தை பொதுத்துறை நிறுவனமான MMTC இறக்குமதி செய்யும்.

எஞ்சியவற்றை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்ய உள்ளன.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தகவலை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே