மேயர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்கள், அவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணத் தொகையை திரும்ப பெறலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மேயர், நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேற்கூறிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது பஞ்சாயத்துராஜ் சட்டத்துக்கு எதிரானது என்று தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.
குறிப்பாக, அ.தி.மு.க கூட்டணியில் இருந்துவரும் பா.ஜ.கவும் மறைமுகத் தேர்தலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மேயர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்கள் அவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணத் தொகையை திரும்ப பெறலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.