தர்பூசணி பழத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங்கின் உருவம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவங்களை தர்பூசணி பழத்தில் வடிவமைத்து உள்ளார்.

இளஞ்செழியன் என்ற அந்த கலைஞர் ஒரே தர்பூசணி பழத்தின் தோலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரது மார்பளவு உருவத்தை செதுக்கி உருவாக்கி உள்ளார்.

மேலும் WELCOME TO INDIA என்ற வாசகத்தை சீன மொழியிலும் பொறித்துள்ளார்.

இந்தியா வந்த சீன அதிபரை வரவேற்கும் விதமாக இளஞ்செழியன் இதனை உருவாக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே